pavanar payirchi maiyam பாவாணர் பயிற்சி மையம் Pavanar study circle pavanar coaching center best coaching center in tenkasi tnpsc coaching centre tenkasi direct and online classes available tnpsc exam center. group1,2,4,7,8 online and offline classes available coaching for electrical engineer combined service exam and TNEB exam daily current affairs contact : Ilayaraja : 8124821689 Karthick: 9688389861
Monday, May 6, 2024
Saturday, May 4, 2024
ஓரெழுத்து ஒரு மொழி
|
பாவாணர் பயிற்சி மையம் திருமலாபுரம் தென்காசி . | தொடர்புக்கு : கார்த்திக்குமார்:9688389861 இளையராஜா:7904471090 |
ஓரெழுத்து ஒரு மொழி
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்
உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
உயிர் எழுத்து | ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ |
மகர வரிசை | மா, மீ, மூ, மே, மே, மோ |
தகர வரிசை | தா, தீ, தூ, தே, தை |
பகர வரிசை | பா, பூ, பே, பை, போ |
நகர வரிசை | நா, நீ, நே, நை, நோ |
ககர வரிசை | கா, கூ, கை, கோ |
சகர வரிசை | சா, சீ, சே, சோ |
வகர வரிசை | வா, வீ, வை, வெள |
யகர வரிசை | யா |
குறில் எழுத்து | நொ, து |
தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார்.
பூ-யா சொற்கள்
“பூ” என்பது ஓரெழுத்து ஒரு மொழி. “கா” என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து “பூங்கா” எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!
ஆ சொல்
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்.
மா சொல்
மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
ஈ-காரச் சொல்
ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
கால மாற்றத்தில் கரைந்தவை
இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
ஏகாரச் சொல்
எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும் அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
முடிவுரை
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில் கனியாகக் காட்டும்.
நன்னூல் என்னும் இலக்கண நூல் எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரணடு சொற்களைத் தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
ஓரெழுத்து ஒரு மொழி | பொருள் |
ஆ | பசு |
ஈ | கொடு |
ஊ | இறைச்சி |
ஏ | அம்பு |
ஐ | தலைவன் |
ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
கா | சோலை |
கூ | பூமி |
கை | ஒழுக்கம் |
கோ | அரசன் |
சா | இறந்துபோ |
சீ | இகழ்ச்சி |
சே | உயர்வு |
சோ | மதில் |
தா | கொடு |
தீ | நெருப்பு |
தூ | தூய்மை |
தே | கடவுள் |
தை | தைத்தல |
நா | நாவு |
நீ | முன்னிலை ஒருமை |
நே | அன்பு |
நை | இழிவு |
நோ | வறுமை |
பா | பாடல் |
பூ | மலர் |
பே | மேகம் |
பை | இளமை |
போ | செல் |
மா | மாமரம் |
மீ | வான் |
மூ | மூப்பு |
மே | அன்பு |
மை | அஞ்சனம் |
மோ | முகத்தல் |
யா | அகலம் |
வா | அழைத்தல் |
வீ | மலர் |
வை | புல் |
வெள | கவர் |
நொ | நோய் |
து | உண் |
தேவநேயப் பாவாணர் notes
தேவநேயப் பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு: · ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர் · பெற்றோர் : ஞானமுத்து, பரிபூரணம் அம்மைய...
-
தேவநேயப் பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு: · ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர் · பெற்றோர் : ஞானமுத்து, பரிபூரணம் அம்மைய...
வாழ்க்கைக் குறிப்பு:
· ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
· பெற்றோர் : ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
· சிறப்பு பெயர்:
· செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
· செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
· மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
படைப்புகள்:
· இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
· கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
· ஒப்பியல் மொழி நூல்
· திராவிடத்தாய்
· சொல்லாராய்ச்சிக் காட்டுரை
· உயர்தரக் கட்டுரை இலக்கணம்
· பழந்தமிழ் ஆட்சி
· முதல் தாய்மொழி
· தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
· தமிழர் திருமணம்
· இசைத்தமிழ் கலம்பகம்
· பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
· தமிழ் வரலாறு
· வடமொழி வரலாறு
· தமிழர் வரலாறு
· தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
· இன்னிசைக்கோவை
· திருக்குறள் தமிழ் மரபுரை
· தமிழர் வேதம்
· வேர்ச்சொல் கட்டுரைகள்
· மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
· தமிழ் இலக்கிய வரலாறு
· செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
· இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
· மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)
குறிப்பு:
· உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
· உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
· மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
· தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்
சிறப்பு:
· அறிஞர் அண்ணா, பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
· மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்
அகரமுதலி
· திருமூலரின் திருமந்திரத்தில்தான் அகராதி என்ற சொல் முதன்முதலில் வந்தது.
· அகராதி என்பது தற்பொழுது அகரமுதலி என்றுவழங்கப்படுவதற்கு முதற்காரணமாவார்.
· 1985-ல் இவரது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதல்பாகம் வெளியானது.
· 1993-ல் இரண்டாம் தொகுதி (படங்களுடன் கூடியது) வெளியானது.
பிற அகராதிகள்
· தமிழ்ப் பேரகராதி – குப்புசாமி.
· தமிழ் – தமிழ் அகர முதலி – மு.சண்முகம்.
· தமிழ் சொல் அகராதி - யாழ்பாணம் கதிரை வேலனார்.
· தமிழ் லெக்சிகன் - சென்னை பல்கலைக்கழக அகராதி
· தமிழ் அகராதி (படங்களுடன் கூடியது) - இராமநாதன்
· தமிழ் – ஆங்கிலப் பேரகராதி – வின்ஸ்லோ
· தற்காலத் தமிழ் சொல்லகராதி - பவானந்தம் பிள்ளை
இவர் மாற்றம் செய்து கூறிய சில தமிழ் சொற்கள்
· ICE CREAM – பனிக்கூழ்
· FRUIT SALAT – பழக்கூட்டு
· மன்னித்துக்கொள் – பொறுத்துக்கொள்
· பஞ்சாங்கம் – ஐந்திறம்